4096
கரைந்துவிடா தென்னுடைய நாவகத்தே இருந்து 

கனத்தசுவை தருகின்ற கற்கண்டே கனிவாய் 
விரைந்துவந்தென் துன்பமெலாம் தவிர்த்தஅரு ளமுதே 

மெய்அருளே மெய்யாகி விளங்குகின்ற விளக்கே 
திரைந்தஉடல் விரைந்துடனே பொன்உடம்பே ஆகித் 

திகழ்ந்தழியா தோங்கஅருள் சித்தேமெய்ச் சத்தே 
வரைந்தென்னை மணம்புரிந்து பொதுநடஞ்செய் அரசே 

மகிழ்வொடுநான் புனைந்திடுஞ்சொன் மாலைஅணிந் தருளே    
4097
கதிக்குவழி காட்டுகின்ற கண்ணேஎன் கண்ணில் 

கலந்தமணி யேமணியில் கலந்தகதிர் ஒளியே 
விதிக்கும்உல குயிர்க்குயிராய் விளங்குகின்ற சிவமே 

மெய்யுணர்ந்தோர் கையகத்தே விளங்கியதீங் கனியே 
மதிக்குமதிக் கப்புறம்போய் வயங்குதனி நிலையே 

மறைமுடிஆ கமமுடிமேல் வயங்கும்இன்ப நிறைவே 
துதிக்கும்அன்பர் தொழப்பொதுவில் நடம்புரியும் அரசே 

சொன்மாலை சூட்டுகின்றேன் தோளில்அணிந் தருளே    
4098
அண்டவள வௌ;வளவோ அவ்வளவும் அவற்றில் 

அமைந்தசரா சரஅளவௌ; வளவோஅவ் வளவும் 
கண்டதுவாய் ஆங்கவைகள் தனித்தனியே அகத்தும் 

காண்புறத்தும் அகப்புறத்தும் புறப்புறத்தும் விளங்க 
விண்டகுபே ரருட்சோதிப் பெருவெளிக்கு நடுவே 

விளங்கிஒரு பெருங்கருணைக் கொடிநாட்டி அருளாம் 
தண்டகும்ஓர் தனிச்செங்கோல் நடத்திமன்றில் நடிக்கும் 

தனிஅரசே என்மாலை தாளில்அணிந் தருளே    
4099
நல்லார்சொல் யோகாந்தப் பதிகள்பல கோடி 

நாட்டியதோர் போதாந்தப் பதிகள்பல கோடி 
வல்லார்சொல் கலாந்தநிலைப் பதிகள்பல கோடி 

வழுத்தும்ஒரு நாதாந்தப் பதிகள்பல கோடி 
இல்லார்ந்த வேதாந்தப் பதிகள்பல கோடி 

இலங்குகின்ற சித்தாந்தப் பதிகள்பல கோடி 
எல்லாம்பேர் அருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும் 

என்அரசே என்மாலை இனிதுபுனைந் தருளே    
4100
நாட்டியதோர் சுத்தபரா சத்திஅண்டம் முதலா 

ஞானசத்தி அண்டமது கடையாக இவற்றுள் 
ஈட்டியபற் பலசத்தி சத்தர்அண்டப் பகுதி 

எத்தனையோ கோடிகளும் தன்நிழற்கீழ் விளங்கச் 
சூட்டியபொன் முடிஇலங்கச் சமரசமெய்ஞ் ஞானச் 

சுத்தசிவ சன்மார்க்கப் பெருநிலையில் அமர்ந்தே 
நீட்டியபே ரருட்சோதித் தனிச்செங்கோல் நடத்தும் 

நீதிநடத் தரசேஎன் நெடுஞ்சொல்அணிந் தருளே