4201
அங்கலிட்ட() களத்தழகர் அம்பலவர் திருத்தோள் 

ஆசையெனும் பேய்அகற்றல் ஆவதிலை எனவே 
பொங்கலிட்ட தாயர்முகம் தொங்கலிட்டுப் போனார் 

பூவைமுகம் பூமுகம்போல் பூரித்து மகிழ்ந்தாள் 
எங்களிட்டம் திருவருள்மங் கலஞ்சூட்டல் அன்றி 

இரண்டுபடா தொன்றாக்கி இன்படைவித் திடவே 
தங்களிட்டம் யாதுதிரு வாய்மலர வேண்டும் 

சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே   

 () அங்கு அல் எனப்பிரித்து அவ்விடத்துஇருள் எனப் 
பொருள்கொள்க - முதற்பதிப்பு இருள் - நஞ்சு 
4202
பனம்பழமே எனினும்இந்தப் பசிதவிர்த்தால் போதும் 

பாரும்எனப் பகர்கின்ற பாவையர்போல் பகராள் 
இனம்பழமோ கங்கலந்தாள் சிவானுபவத் தல்லால் 

எந்தஅனு பவங்களிலும் இச்சைஇல்லாள் அவர்தம் 
மனம்பழமோ காயோஎன் றறிந்துவர விடுத்தாள் 

மற்றவர்போல் காசுபணத் தாசைவைத்து வருந்தாள் 
தனம்பழமோ தேவர்திரு வாய்மலர வேண்டும் 

சபையில்நடம் புரிகின்ற தனிப்பெரிய துரையே    
4203
புல்லவரே பொய்உலக போகம்உற விழைவார் 

புண்ணியரே சிவபோகம் பொருந்துதற்கு விழைவார் 
கல்லவரே மணிஇவரே என்றறிந்தாள் அதனால் 

கனவிடையும் பொய்யுறவு கருதுகிலாள் சிறிதும் 
நல்லவரே எனினும்உமை நாடாரேல் அவரை 

நன்குமதி யாள்இவளை நண்ணஎண்ணம் உளதோ 
வல்லவரே நுமதுதிரு வாய்மலர வேண்டும் 

வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே    
4204
தத்துவரும் தத்துவஞ்செய் தலைவர்களும் பிறரும் 

தனித்தனியே வலிந்துவந்து தன்எதிர்நிற் கின்றார் 
எத்துணையும் மற்றவரை ஏறெடுத்துப் பாராள் 

இருவிழிகள் நீர்சொரிவாள் என்னுயிர்நா யகனே 
ஒத்துயிரில் கலந்துகொண்ட உடையாய்என் றுமையே 

ஓதுகின்றாள் இவள்அளவில் உத்தமரே உமது 
சித்தம்எது தேவர்திரு வாய்மலர வேண்டும் 

சிற்சபையில் பொற்சபையில் திகழ்பெரிய துரையே    
4205
அன்னையைக்கண் டம்மாநீ அம்பலத்தென் கணவர் 

அடியவளேல் மிகவருக அல்லள்எனில் இங்கே 
என்னைஉனக் கிருக்கின்ற தேகுகஎன் றுரைப்பாள் 

இச்சைஎலாம் உம்மிடத்தே இசைந்தனள்இங் கிவளை 
முன்னையள்என் றெண்ணாதீர் தாழ்த்திருப்பீர் ஆனால் 

முடுகிஉயிர் விடுத்திடுவாள் கடுகிவரல் உளதேல் 
மன்னவரே உமதுதிரு வாய்மலர வேண்டும் 

வயங்குதிரு மணிமன்றில் வாழ்பெரிய துரையே