4231
பதிவரும்ஓர் தருணம்இது நீவிர்அவர் வடிவைப் 

பார்ப்பதற்குத் தரமில்லீர் என்றஅத னாலோ 
எதிலும்எனக் கிச்சைஇல்லை அவரடிக்கண் அல்லால் 

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
மதிமுகத்தாள் பாங்கிஒரு விதிமுகத்தாள் ஆனாள் 

மகிழ்ந்தென்னை வளர்த்தவளும் இகழ்ந்துபல புகன்றாள் 
துதிசெய்மட மாதர்எலாம் சதிசெய்வார் ஆனார் 

சுத்தர்நட ராயர்திருச் சித்தம்அறிந் திலனே    
4232
மன்றாடுங் கணவர்திரு வார்த்தைஅன்றி உமது 

வார்த்தைஎன்றன் செவிக்கேறா தென்றஅத னாலோ 
இன்றாவி அன்னவர்க்குத் தனித்தஇடங் காணேன் 

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
முன்றானை அவிழ்ந்துவிழ முடுகிநடக் கின்றாள் 

முதற்பாங்கி வளர்த்தவளும் மதர்ப்புடன்செல் கின்றாள் 
ஒன்றாத மனப்பெண்கள் வென்றாரின் அடுத்தார் 

ஒருத்தநட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே    
4233
கூடியஎன் கணவர்எனைக் கூடாமற் கலைக்கக் 

கூடுவதோ நும்மாலே என்றஅத னாலோ 
ஏடிஎனை அறியாரோ சபைக்குவரு வாரோ 

என்றுரைத்தேன் இதனாலோ எதனாலோ அறியேன் 
நாடியஎன் பாங்கிமன மூடிநின்று போனாள் 

நண்ணிஎனை வளர்த்தவளும் எண்ணியவா றிசைத்தாள் 
தேடியஆ யங்களெலாம் கூடிஉரைக் கின்றார் 

திருத்தர்நட ராயர்திருக் கருத்தைஅறிந் திலனே    

--------------------------------------------------------------------------------

 ஞானசிதம்பர வெண்பா: தில்லையும் பார்வதிபுரமும் 
நேரிசை வெண்பா
4234
அன்னையப்பன் மாவினத்தார் ஆய்குழலார் ஆசையினால் 
தென்னைஒப்ப நீண்ட சிறுநெஞ்சே - என்னைஎன்னை 
யாவகைசேர் வாயில் எயிற்றில்லை என்கிலையே 
ஆவகைஐந் தாய்ப்பதம்ஆ றார்ந்து    
4235
நீர்க்கிசைந்த நாம நிலைமூன்று கொண்டபெயர் 
போர்க்கிசைந்த தென்றறியாப் புன்னெஞ்சே - நீர்க்கிசைந்தே 
ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்றுஒன்று ஒன்றுஒன்று தில்லைமணி 
மன்றொன்று வானை மகிழ்ந்து