4241
நடிப்பார் வதிதில்லை நற்கோ புரத்தின் 
அடிப்பாவை யும்()வடக்கே ஆர்ந்து - கொடிப்பாய 
நின்று வளர்மலைபோல் நெஞ்சேபார்த் தால்தெரியும் 
இன்றெவ்விடத் தென்னிலிப்பாட் டில்   

 () அடிப்பார்வையும் - முதற்பதிப்பு, சிவாசாரியர் அகவற் பதிப்பு, பொ சு, பி இரா,  
4242
பூமி பொருந்து புரத்தே() நமதுசிவ 
காமிதனை வேட்டுக் கலந்தமர்ந்தான் - நேமி 
அளித்தான்மால் கண்மலருக் கானந்தக் கூத்தில் 
களித்தான் அவன்றான் களித்து   

 () பூமிபொருந்துபுரம் - பார்வதிபுரம் பூமி - பார், பொருந்து - வதி  

--------------------------------------------------------------------------------

 சிவபதி விளக்கம் 
எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
4243
உரைவளர் கலையே கலைவளர் உரையே உரைகலை வளர்தரு பொருளே 
விரைவளர் மலரே மலர்வளர் விரையே விரைமலர் வளர்தரு நறவே 
கரைவளர் தருவே தருவளர் கரையே கரைதரு வளர்கிளர் கனியே 
பரைவளர் ஒளியே ஒளிவளர் பரையே பரையொளி வளர்சிவ பதியே    
4244
ஒளிவளர் உயிரே உயிர்வளர் ஒளியே ஒளியுயிர் வளர்தரும் உணர்வே 
வெளிவளர் நிறைவே நிறைவளர் வெளியே வெளிநிறை வளர்தரு விளைவே 
வளிவளர் அசைவே அசைவளர் வளியே வளியசை வளர்தரு செயலே 
அளிவளர் அனலே அனல்வளர் அளியே அளியனல் வளர்சிவ பதியே    
4245
அடிவளர் இயலே இயல்வளர் அடியே அடியியல் வளர்தரு கதியே 
முடிவளர் பொருளே பொருள்வளர் முடியே முடிபொருள் வளர்சுக நிதியே 
படிவளர் விதையே விதைவளர் படியே படிவிதை வளர்பல நிகழ்வே 
தடிவளர் முகிலே முகில்வளர் தடியே தடிமுகில் வளர்சிவ பதியே