4256
தனையா வென்றழைத் தே - அருட் - சத்தி யளித்தவ னே 
அனையா யப்பனு மாய் - எனக் - காரிய னானவ னே 
இனையா தென்னையு மேல் - நிலை - ஏற்றுவித் தாண்டவ னே 
உனையான் ஏத்துகின் றேன் - எனக் - குண்மை உரைத்தரு ளே    
4257
துப்பார் செஞ்சுடரே - அருட் - சோதி சுகக்கட லே 
அப்பா என்னர சே - திரு - வம்பலத் தாரமு தே 
இப்பா ரிற்பசிக் கே - தந்த - இன்சுவை நல்லுண வே 
ஒப்பாய் ஒப்பரி யாய் - எனக் - குண்மை உரைத்தரு ளே    
4258
என்றே யென்று ளுறுஞ் - சுட - ரேஎனை ஈன்றவ னே 
நன்றே நண்பெனக் கே - மிக - நல்கிய நாயக னே 
மன்றேர் மாமணி யே - சுக - வாழ்க்கையின் மெய்ப்பொரு ளே 
ஒன்றே யென்றுணை யே - எனக் - குண்மை உரைத்தரு ளே    
4259
திருவே தௌ;ளமு தே - அருட் - சித்த சிகாமணி யே 
கருவே ரற்றிட வே - களை - கின்றவென் கண்ணுத லே 
மருவே மாமல ரே - மலர் - வாழ்கின்ற வானவ னாம் 
உருவே என்குரு வே - எனக் - குண்மை உரைத்தரு ளே    
4260
தடையா வுந்தவிர்த் தே - எனைத் - தாங்கிக்கொண் டாண்டவ னே 
அடையா யன்பிலர் பால் - எனக் - கன்பொடு தந்தபெ ருங் 
கொடையாய் குற்றமெ லாங் - குணங் - கொண்டகு ணக்குன்ற மே 
உடையாய் உத்தம னே - எனக் - குண்மை உரைத்தரு ளே