4266
மெய்யா மெய்யரு ளே - என்று - மேவிய மெய்ப்பொரு ளே 
கையா ருங்கனி யே - நுதற் - கண்கொண்ட செங்கரும் பே 
செய்யாய் வெண்ணிறத் தாய் - திருச் - சிற்றம்ப லநடஞ் செய் 
ஐயா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே    
4267
பொறிவே றின்றி நினை - நிதம் - போற்றும் புனிதரு ளே 
குறிவே றின்றி நின்ற - பெருஞ் - சோதிக் கொழுஞ்சுட ரே 
செறிவே தங்களெ லாம் - உரை - செய்ய நிறைந்திடும் பேர் 
அறிவே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே    
4268
முத்தா முத்தரு ளே - ஒளிர் - கின்ற முழுமுத லே 
சித்தா சித்திஎ லாந் - தர - வல்ல செழுஞ்சுட ரே 
பித்தா பித்தனெ னை - வலிந் - தாண்ட பெருந்தகை யே 
அத்தா தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே    
4269
தன்னே ரில்லவ னே - எனைத் - தந்த தயாநிதி யே 
மன்னே மன்றிடத் தே - நடஞ் - செய்யுமென் வாழ்முத லே 
பொன்னே என்னுயி ரே - உயி - ருள்நிறை பூரண மே 
அன்னே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே    
4270
ஒளியே அவ்வொளி யின் - நடு - உள்ளொளிக் குள்ளொளி யே 
வெளியே எவ்வெளி யும் - அடங் - கின்ற வெறுவெளி யே 
தளியே அம்பலத் தே - நடஞ் - செய்யுந் தயாநிதி யே 
அளியே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே