4271
மருளேய் நெஞ்சக னேன் - மன - வாட்டமெ லாந்தவிர்த் தே 
தெருளே யோர்வடி வாய் - உறச் - செய்த செழுஞ்சுட ரே 
பொருளே சிற்சபை வாழ் - வுறு - கின்றவென் புண்ணிய னே 
அருளே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே    
4272
முன்பே என்றனை யே - வலிந் - தாட்கொண்ட முன்னவ னே 
இன்பே என்னுயி ரே - எனை -ஈன்ற இறையவ னே 
பொன்பே ரம்பல வா - சிவ - போகஞ்செய் சிற்சபை வாழ் 
அன்பே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே    
4273
பவனே வெம்பவ நோய் - தனைத் - தீர்க்கும் பரஞ்சுட ரே 
சிவனே செம்பொரு ளே - திருச் - சிற்றம் பலநடிப் பாய் 
தவநே யம்பெறு வார் - தமைத் - தாங்கி யருள்செய வல் 
லவனே தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே    
4274
தேனாய்த் தீம்பழ மாய்ச் - சுவை - சேர்கரும் பாயமு தம் 
தானாய் அன்பரு ளே - இனிக் - கின்ற தனிப்பொரு ளே 
வானாய்க் காலன லாய்ப் - புன - லாயதில் வாழ்புவி யாய் 
ஆனாய் தந்தனை யே - அரு - ளாரமு தந்தனை யே    
4275
பொடியேற் கும்புய னே - அருட் - பொன்னம் பலத்தர சே 
செடியேற் கன்றளித் தாய் - திருச் - சிற்றம் பலச்சுட ரே 
கடியேற் கன்னையெ னுஞ் - சிவ - காமக் கொடையுடை யாய் 
அடியேற் கின்றளித் தாய் - அரு - ளாரமு தந்தனை யே    

--------------------------------------------------------------------------------

 உபதேச வினா 
கலித்தாழிசை