4281
வகார வெளியில் சிகார உருவாய் 

மகாரத் திருநடம் நான்காணல் வேண்டும் 
விகார உலகை வெறுப்பாயோ தோழி 

வேறாகி என்சொல் மறுப்பாயோ தோழி    
4282
நாதாந்த நிலையொடு போதாந்த நிலைக்கு 

நடுவாம் பொதுநடம் நான்காணல் வேண்டும் 
சூதாந்தற் போதத்தைச் சுடுவாயோ தோழி 

துட்டநெறியில் கெடுவாயோ தோழி    
4283
அறிவில் அறிவை அறியும் பொதுவில் 

ஆனந்தத் திருநடம் நான்காணல் வேண்டும் 
செறிவில் அறிவாகிச் செல்வாயோ தோழி 

செல்லாமல் மெய்ந்நெறி வெல்வாயோ தோழி   
4284
என்னைத் தன்னோடே இருத்தும் பொதுவில் 

இன்பத் திருநடம் நான்காணல் வேண்டும் 
நின்னைவிட் டென்னோடே நிலைப்பாயோ தோழி 

நிலையாமல் என்னையும் அலைப்பாயோ தோழி    
4285
துரியத்திற் கப்பாலுந் தோன்றும் பொதுவில் 

ஸோதித் திருநடம் நான்காணல் வேண்டும் 
கரியைக்கண் டாங்கது காண்பாயோ தோழி 

காணாது போய்ப்பழி() பூண்பாயோ தோழி   

 () பொய்ப்பணி - முதற்பதிப்பு பொ சு, பி இரா,