4286
தத்துவத் துட்புறந் தானாம் பொதுவில் 

சத்தாந் திருநடம் நான்காணல் வேண்டும் 
கொத்தறு வித்தைக் குறிப்பாயோ தோழி 

குறியா துலகில் வெறிப்பாயோ தோழி    

--------------------------------------------------------------------------------

 நெஞ்சொடு நேர்தல் 
கலித்தாழிசை 
4287
அடங்குநாள் இல்லா தமர்ந்தானைக் காணற்கே() 
தொடங்குநாள் நல்லதன் றோ - நெஞ்சே 
தொடங்குநாள் நல்லதன் றோ   

 () காணவே - பி இரா, பதிப்பு  
4288
வல்லவா றெல்லாமும் வல்லானைக் காணற்கே 
நல்லநாள் எண்ணிய நாள் - நெஞ்சே 
நல்லநாள் எண்ணிய நாள்   
4289
காலங் கடந்த கடவுளைக் காணற்குக் 
காலங் கருதுவ தேன் - நெஞ்சே 
காலங் கருதுவ தேன்    
4290
ஆலம் அமுதாக்கும் அண்ணலைக் காணற்குக் 
காலங் கருதுவ தேன் - நெஞ்சே 
காலங் கருதுவ தேன்