4296
ஒக்க அமுதத்தை உண்டோ ம் இனிச்சற்றும்
விக்கல் வராதுகண் டாய் - நெஞ்சே 
விக்கல் வராதுகண் டாய்  

--------------------------------------------------------------------------------

 அஞ்சாதே நெஞ்சே 
சிந்து 
 பல்லவி 
4297
அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே 
அஞ்சா தே நெஞ்சே அஞ்சா தே   
 கண்ணிகள் 
4298
வஞ்சமி லார்நாம்() வருந்திடில் அப்போதே 
அஞ்சலென் பார்இதோ அம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே  

 () வஞ்சமிலா நாம் - முதற்பதிப்பு, பொ சு; பி இரா பதிப்பு 
4299
துய்யர் அருட்பெருஞ் ஸோதியார் நம்முடை 
அய்யர் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே  
4300
மண்ணில் நமையாண்ட வள்ளலார் நம்முடை 
அண்ணல் இதோதிரு வம்பலத் திருக்கின்றார் அஞ்சா தே