4321
பாடிய வேதங்கள் தேடிய பாதம் 
பத்திசெய் பத்தர்க்குத் தித்திக்கும் பாதம் 
நாடிய மாதவர்() நேடிய பாதம் 
நாதாந்த நாட்டுக்கு நாயக பாதம் ஆடிய   

 () மாதவன் - ஆ பா பாதிப்பு  
4322
தீராத வல்வினை தீர்க்கின்ற பாதம் 
தெய்வங்கள் எல்லாந் தெரிசிக்கும் பாதம் 
வாரா வரவாகி வந்தபொற் பாதம் 
வஞ்ச மனத்தில் வசியாத பாதம் ஆடிய   
4323
ஆரா அமுதாகி அண்ணிக்கும் பாதம் 
அன்பர் உளத்தே அமர்ந்தருள் பாதம் 
நாரா யணன்விழி நண்ணிய பாதம் 
நான்புனை பாடல் நயந்தபொற் பாதம்  ஆடிய    
4324
நல்லவர் எல்லாம் நயக்கின்ற பாதம் 
நாத முடிவில் நடிக்கின்ற பாதம் 
வல்லவர் சொல்லெல்லாம் வல்லபொற் பாதம் 
மந்திர யந்திர தந்திர பாதம்  ஆடிய    
4325
எச்சம யத்தும் இலங்கிய பாதம் 
எள்ளுக்குள் எண்ணெய்போல் எங்குமாம் பாதம் 
அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண்ட பாதம் 
ஆனந்த நாட்டுக் கதிபதி பாதம்  ஆடிய