4326
தேவர்கள் எல்லாரும் சிந்திக்கும் பாதம் 
தௌ;ளமு தாய்உளந் தித்திக்கும் பாதம் 
மூவரும் காணா முழுமுதற் பாதம் 
முப்பாழுக் கப்பால் முளைத்தபொற் பாதம்  ஆடிய  
4327
துரிய வெளிக்கே உரியபொற் பாதம் 
சுகமய மாகிய சுந்தரப் பாதம் 
பெரிய பொருளென்று பேசும்பொற் பாதம் 
பேறெல்லாந் தந்த பெரும்புகழ்ப் பாதம் ஆடிய   
4328
சாகா வரந்தந்த தாரகப் பாதம் 
சச்சிதா னந்த சதோதய பாதம் 
தேகாதி எல்லாம் சிருட்டிக்கும் பாதம் 
திதிமுதல் ஐந்தொழில் செய்கின்ற பாதம் ஆடிய    
4329
ஓங்கார பீடத் தொளிர்கின்ற பாதம் 
ஒன்றாய் இரண்டாகி ஓங்கிய பாதம் 
தூங்காத தூக்கத்தில் தூக்கிய பாதம் 
துரியத்தில் ஊன்றித் துலங்கிய பாதம்  ஆடிய    
4330
ஐவண்ண முங்கொண்ட அற்புதப் பாதம் 
அபயர்() எல்லார்க்கும் அமுதான பாதம் 
கைவண்ண நெல்லிக் கனியாகும் பாதம் 
கண்ணும் கருத்தும் கலந்தபொற் பாதம் ஆடிய   

 () ஐயர் - ச மு க பதிப்பு