4336
நாரண னாதியர் நாடரும் பாதம் 
நான்தவத் தாற்பெற்ற நற்றுணைப் பாதம் 
ஆரணம் ஆகமம் போற்றிய பாதம் 
ஆசைவிட் டார்க்கே அணிமையாம் பாதம்   
 ஆடிய பாதமன் றாடிய பாதம் 
ஆடிய பாதநின் றாடிய பாதம்  --------------------------------------------------------------------------------

 அபயம் அபயம் 
சிந்து 
 பல்லவி 
4337
அபயம் அபயம் அபயம்   
 கண்ணிகள் 
4338
உபயம தாய்என் உறவாய்ச் சிதம்பரச் 
சபையில் நடஞ்செயும் சாமி பதத்திற்கே() அபயம்  

 () பாதத்திற்கே - பி இரா, ஆ பா 
4339
எம்பலத் தால்எம்மை ஏன்றுகொ ளத்தில்லை 
அம்பலத் தாடும்எம் ஐயர் பதத்திற்கே அபயம்  
4340
தவசிதம் பரமாகித் தன்மய மாய்ச்செயும் 
சிவசிதம் பரமகா தேவர் பதத்திற்கே அபயம்