4341
ஒன்றும் பதத்திற் குயர்பொரு ளாகியே 
என்றும்என் உள்ளத் தினிக்கும் பதத்திற்கே அபயம்  
4342
வானந்த மாந்தில்லை மன்றிடை என்றுநின் 
றானந்தத் தாண்டவ மாடும் பதத்திற்கே அபயம்  
4343
நாரா யணனொடு நான்முக னாதியர் 
பாரா யணம்செயும் பதும பதத்திற்கே அபயம்  
4344
அன்பர் செயும்பிழை ஆயிர மும்பொறுத் 
தின்ப மளிக்குநம் ஈசர் பதத்திற்கே அபயம்  
4345
குற்றம் செயினும் குணமாகக் கொண்டுநம் 
அற்றம் தவிர்க்குநம் அப்பர் பதத்திற்கே அபயம்