4346
செம்பொருள் ஆகிச் சிதம்பரத் தேஎன்றும் 
நம்பொருள் ஆன நடேசர் பதத்திற்கே அபயம்  
4347
வெச்சென்ற மாயை வினையாதி யால்வந்த 
அச்சம் தவிர்க்குநம் ஐயர் பதத்திற்கே அபயம்  
4348
எண்ணிய எண்ணங்கள் எல்லா முடிக்குநம் 
புண்ணிய னார்தெய்வப் பொன்னடிப் போதுக்கே அபயம்  
4349
மன்னம் பரத்தே வடிவில் வடிவாகிப் 
பொன்னம் பலத்தாடும் பொன்னடிப் போதுக்கே அபயம்  
4350
நாத முடியில்/() நடம்புரிந் தன்பர்க்குப் 
போதம் அளிக்கின்ற பொன்னடிப் போதுக்கே அபயம்  

 () முடிவில் - முதற்பதிப்பு, பொ சு, ச மு க