4351
உச்சி தாழ்கின்ற உறவோர் உறவான 
சச்சி தானந்தத் தனிநடப் போதுக்கே அபயம்  
4352
சித்தமும் உள்ளமும் தித்தித் தினிக்கின்ற 
புத்தமு தாகிய பொன்னடிப் போதுக்கே அபயம்  
 அபயம் அபயம் அபயம் --------------------------------------------------------------------------------

 அம்பலவாணர் வருகை 
சிந்து 
 பல்லவி 
4353
வாரீர் சிதம்பர வல்லி சிவகாம 
வல்லி மணாளரே வாரீர் 
மணிமன்ற வாணரே வாரீர்   
 கண்ணிகள் 
4354
அருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவ ரேதிரு 

அம்பல வாணரே வாரீர் 

அன்புடை யாளரே வாரீர் வாரீர்  
4355
அச்சம் தவிர்த்தென்னை ஆட்கொண் டருளிய 

அந்தண ரேஇங்கு வாரீர் 

அம்பலத் தையரே வாரீர் வாரீர்