4356
அன்புரு வானவர் இன்புற உள்ளே 

அறிவுரு வாயினீர் வாரீர் 

அருட்பெருஞ் ஸோதியீர் வாரீர்  வாரீர்   
4357
அண்டங்கள் எல்லாம் அணுவில் அடக்கும் 

அரும்பெருஞ் சித்தரே வாரீர் 

அற்புத ரேஇங்கு வாரீர்  வாரீர்   
4358
அம்மையு மாய்எனக் கப்பனு மாகிஎன் 

அன்பனு மாயினீர் வாரீர் 

அங்கண ரேஇங்கு வாரீர் வாரீர்   
4359
அல்லல் அறுத்தென் அறிவை விளக்கிய 

அம்பல வாணரே வாரீர் 

செம்பொரு ளாயினீர் வாரீர்  வாரீர்   
4360
அப்பணி பொன்முடி அப்பனென் றேத்துமெய் 

அன்பருக் கன்பரே வாரீர் 

இன்பம் தரஇங்கு வாரீர்  வாரீர்