4361
அச்சுதர் நான்முகர் உச்சியில் மெச்சும் 

அடிக்கம லத்தீரே வாரீர் 

நடிக்கவல் லீர்இங்கு வாரீர்  வாரீர்    
4362
அண்டர்க் கரும்பதந் தொண்டர்க் கெளிதில் 

அளித்திட வல்லீரே வாரீர் 

களித்தென்னை ஆண்டீரே வாரீர் வாரீர்   
4363
அம்பர மானசி தம்பர நாடகம் 

ஆடவல் லீர்இங்கு வாரீர் 

பாடல்உ வந்தீரே() வாரீர்  வாரீர்   

 () பாடவல்லீரிங்கு - முதற்பதிப்பு, பொ சு, ச மு க  
4364
ஆதிஅ னாதிஎன் றாரணம் போற்றும் 

அரும்பெருஞ் ஸோதியீர் வாரீர் 

ஆனந்த நாடரே வாரீர்  வாரீர்   
4365
ஆகம வேதம் அனேக முகங்கொண் 

டருச்சிக்கும் பாதரே வாரீர் 

ஆருயிர் நாதரே வாரீர்  வாரீர்