4366
ஆசறும் அந்தங்கள் ஆறும் புகன்றநல் 

ஆரிய ரேஇங்கு வாரீர் 

ஆனந்தக் கூத்தரே வாரீர்  வாரீர்    
4367
ஆல நிழற்கண் அமர்ந்தறஞ் சொன்னநல் 

ஆரிய ரேஇங்கு வாரீர் 

ஆனந்தக் கூத்தரே வாரீர் வாரீர்   
4368
ஆரமு தாகிஎன் ஆவியைக் காக்கின்ற 

ஆனந்த ரேஇங்கு வாரீர் 

ஆடல்வல் லீர்இங்கு வாரீர்  வாரீர்  
4369
ஆதர வாய்என் அறிவைத் தெளிவித் 

தமுதம் அளித்தீரே வாரீர் 

ஆடிய பாதரே வாரீர்  வாரீர்   
4370
ஆதார மீதானத் தப்பாலும் காண்டற் 

கரும்பெருஞ் ஸோதியீர் வாரீர் 

கரும்பினில் இனிக்கின்றீர் வாரீர் வாரீர்