4371
ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் 

ஸோதிய ரேஇங்கு வாரீர் 

வேதிய ரேஇங்கு வாரீர்  வாரீர்    
4372
ஆடல்கொண் டீர்திரு வம்பலத் தேஎன்றன் 

பாடல்கொண் டீர்இங்கு வாரீர் 

கூடவல் லீர்இங்கு வாரீர் வாரீர்    
4373
ஆக்கம் கொடுத்தென்றன் தூக்கம் தடுத்தஎன் 

ஆண்டவ ரேஇங்கு வாரீர் 

தாண்டவ ரேஇங்கு வாரீர் வாரீர்   
4374
ஆபத்தை நீக்கிஓர் தீபத்தை ஏற்றிஎன் 

ஆணவம் போக்கினீர் வாரீர் 

காணவந் தேன்இங்கு வாரீர் வாரீர்    
4375
இதுதரு ணம்தரு ணம்தரு ணம்என் 

இறையவ ரேஇங்கு வாரீர் 

இடர்தவிர்த் தாட்கொண்டீர் வாரீர்  வாரீர்