4386
ஈனம் அறுத்துமெய்ஞ் ஞான விளக்கென் 

இதயத்தில் ஏற்றினீர் வாரீர் 

உதயச் சுடரினீர் வாரீர் வாரீர்  
4387
ஈடறி யாதமெய் வீடுதந் தன்பரை 

இன்புறச் செய்கின்றீர் வாரீர் 

வன்பர்க் கரியீரே வாரீர் வாரீர்  
4388
ஈதியல் என்றுநின் றோதிய வேதத்திற் 

கெட்டா திருந்தீரே வாரீர் 

நட்டார்க் கெளியீரே வாரீர் வாரீர்  
4389
ஈசர் எனும்பல தேசர்கள் போற்றும்ந 

டேசரே நீர்இங்கு வாரீர் 

நேசரே நீர்இங்கு வாரீர் வாரீர்  
4390
ஈசர் பலிக்குழல்() நேசர்என் றன்பர்கள் 

ஏசநின் றீர்இங்கு வாரீர் 

நாசமில் லீர்இங்கு வாரீர் வாரீர்  

 () ஈசர் எளியற்கு - முதற்பதிப்பு, பொ சு, பி இரா,