4391
ஈறறி யாமறை யோன்என் றறிஞர் 

இயம்பநின் றீர்இங்கு வாரீர் 

வயந்தரு வீர்இங்கு வாரீர் வாரீர்   
4392
ஈதல்கண் டேமிகக் காதல்கொண் டேன்எனக் 

கீதல்செய் வீர்இங்கு வாரீர் 

ஓதரி யீர்இங்கு வாரீர்  வாரீர்  
4393
ஈடணை அற்றநெஞ் சூடணை உற்றுமற் 

றீடணை யீர்இங்கு வாரீர் 

ஆடவல் லீர்இங்கு வாரீர்  வாரீர்   
4394
ஈண்டறி வோங்கிடத் தூண்டறி வாகிஉள் 

ஈண்டுகின் றீர்இங்கு வாரீர் 

ஆண்டவ ரேஇங்கு வாரீர் வாரீர்   
4395
உள்ளதே உள்ளது விள்ளது வென்றெனக் 

குள்ள துரைசெய்தீர் வாரீர் 

வள்ளல் விரைந்திங்கு வாரீர்  வாரீர்