4396
உருவாய் அருவாய் உருவரு வாய்அவை 

ஒன்றுமல் லீர்இங்கு வாரீர் 

என்றும்நல் லீர்இங்கு வாரீர் வாரீர்  
4397
உறவும் பகையும் உடைய நடையில் 

உறவும்எண் ணேன்இங்கு வாரீர் 

பிறவுநண் ணேன்இங்கு வாரீர் வாரீர்  
4398
உள்ளக் கருத்தைநான் வள்ளற் குரைப்பதென் 

உள்ளத் திருந்தீரே வாரீர் 

விள்ளற் கரியீரே வாரீர் வாரீர்  
4399
உய்யவல் லார்க்கருள் செய்யவல் லீர்நானும் 

உய்யவல் லேன்இங்கு வாரீர் 

செய்யவல் லீர்இங்கு வாரீர் வாரீர்  
4400
உடையவ ரார்இக் கடையவ னேனுக் 

குடையவ ரேஇங்கு வாரீர் 

சடையவ ரே() இங்கு வாரீர் வாரீர் 

 () தடை தவிர்ப்பீர் - முதற்பதிப்பு, பொ சு, பி இரா