4401
உறங்கி இறங்கும் உலகவர் போலநான் 

உறங்கமாட் டேன்இங்கு வாரீர் 

இறங்கமாட் டேன்இங்கு வாரீர்  வாரீர்    
4402
உண்டுடுத் தின்னும் உழலமாட் டேன்அமு 

துண்டி விரும்பினேன் வாரீர் 

உண்டி தரஇங்கு வாரீர் வாரீர்  
4403
உன்னுதோ றுன்னுதோ றுள்ளே இனிக்கின்ற 

உத்தம ரேஇங்கு வாரீர் 

உற்ற துணையானீர் வாரீர்  வாரீர்   
4404
உம்மாணை உம்மாணை உம்மைஅல் லால்எனக் 

குற்றவர் மற்றிலை வாரீர் 

உற்றறிந் தீர்இங்கு வாரீர் வாரீர்   
4405
ஊன நடந்தவிர்த் தான நடங்காட்டு 

மோன நடேசரே வாரீர் 

ஞான நடேசரே வாரீர்  வாரீர்