4406
ஊருமில் லீர்ஒரு பேருமில் லீர்அறி 

வோருமில் லீர்இங்கு வாரீர் 

யாருமில் லீர்இங்கு வாரீர் வாரீர் 
4407
ஊறு சிவானந்தப் பேறு தருகின்ற 

வீறுடை யீர்இங்கு வாரீர் 

நீறுடை யீர்இங்கு வாரீர் வாரீர்  
4408
ஊன்றுநும் சேவடி சான்று தரிக்கிலேன் 

ஏன்றுகொள் வீர்இங்கு வாரீர் 

ஆன்றவ ரேஇங்கு வாரீர் வாரீர்  
4409
ஊற்றை உடம்பிது மாற்றுயர் பொன்னென 

ஏற்றம் அருள்செய்வீர் வாரீர் 

தேற்றம் அருள்செய்வீர் வாரீர் வாரீர்  
4410
ஊடல்இல் லீர்எனைக் கூடல்வல் லீர்என்னுள் 

பாடல்சொல் வீர்இங்கு வாரீர் 

ஆடல்நல் லீர்இங்கு வாரீர் வாரீர்