4416
என்னுயிர் ஆகிஎன் றன்உயிர்க் குள்ளேஓர் 

இன்னுயிர் ஆயினீர் வாரீர் 

என்னுயிர் நாதரே வாரீர் வாரீர்   
4417
என்கண் அருள்செய்தென் புன்கண் விலக்கிய 

என்கண் ணனையீரே வாரீர் 

மின்கண் ணுதலீரே வாரீர்  வாரீர்    
4418
எல்லா உயிர்களும் நல்லார் எனத்தொழும் 

எல்லாம்வல் லீர்இங்கு வாரீர் 

சொல்லா நிலையினீர் வாரீர் வாரீர்    
4419
எட்டும் இரண்டுமென் றிட்டு வழங்குதல் 

எட்டும் படிசெய்தீர் வாரீர் 

எட்டுரு வாயினீர் வாரீர்  வாரீர்  

 () எட்டும் இரண்டும் - பத்து (ய) ய - ஆன்மா
எட்டுரு - அ;டமூர்த்தம் எட்டு உரு-(எட்டு தமிழில் எழுத ஹஅஒ ஆகும்) 
அகர வடிவம் எட்டுரு - அரு ச மு க 
4420
என்று கண்டாய்இது() நன்றுகொண் டாளுக 

என்றுதந் தீர்இங்கு வாரீர் 

அன்றுவந் தீர்இன்று வாரீர் வாரீர்   

 () கண்டாமிது - முதற்பதிப்பு, பொ சு, பி இரா