4421
எச்சம யங்களும் பொய்ச்சம யமென்றீர் 

இச்சம யம்இங்கு வாரீர் 

மெய்ச்சம யந்தந்தீர் வாரீர்  வாரீர்    
4422
என்பாற் களிப்பொடும் அன்பால்ஒன் றீந்திதை 

இன்பால் பெறுகென்றீர் வாரீர் 

தென்பால் முகங்கொண்டீர் வாரீர் வாரீர்   
4423
எச்ச உரையன்றென் இச்சைஎல் லாம்உம 

திச்சைகண் டீர்இங்கு வாரீர் 

அச்சம்த விர்த்தீரே வாரீர்  வாரீர்   
4424
எண்ணமெல் லாம்உம தெண்ணமல் லால்வேறோர் 

எண்ணம் எனக்கில்லை வாரீர் 

வண்ணம் அளிக்கின்றீர் வாரீர்  வாரீர்    
4425
ஏராய நான்முகர் நாராய ணர்மற்றும் 

பாராய ணம்செய்வீர் வாரீர் 

ஊராயம் ஆயினீர் வாரீர் வாரீர்