4426
ஏம மிகுந்திரு வாம சுகந்தரும் 

ஏம சபேசரே வாரீர் 

சோம சிகாமணி வாரீர்  வாரீர்    
4427
ஏத மிலாப்பர நாத முடிப்பொருள் 

ஏதது சொல்லுவீர் வாரீர் 

ஈதல் உடையீரே வாரீர்  வாரீர்   
4428
ஏக பராபர யோக வெளிக்கப்பால் 

ஏக வெளிநின்றீர் வாரீர் 

ஏகர் அனேகரே வாரீர்  வாரீர்   
4429
ஏறி இறங்கி இருந்தேன் இறங்காமல் 

ஏறவைத் தீர்இங்கு வாரீர் 

தேறவைத் தீர்இங்கு வாரீர் வாரீர்   

4430
ஏகாந்த நன்னிலை யோகாந்தத் துள்ளதென் 

றேகாந்தம் சொல்லினீர் வாரீர் 

தேகாந்தம் இல்லீரே வாரீர்  வாரீர்