4431
ஏகாத கல்விதான் சாகாத கல்வியென் 

றேகாத லாற்சொன்னீர் வாரீர் 

வேகாத காலினீர் வாரீர் வாரீர்  
4432
ஏடா யிரமென்னை கோடா மொழிஒன்றே 

ஏடாஎன் றீர்இங்கு வாரீர் 

ஈடாவார் இல்லீரே வாரீர் வாரீர்  
4433
ஏசாத தந்திரம் பேசாத மந்திரம் 

ஈசான மேலென்றீர் வாரீர் 

ஆசாதி இல்லீரே வாரீர் வாரீர்  
4434
ஏனென்பார் வேறிலை நான்அன்பாற் கூவுகின் 

றேன்என்பால் ஏனென்பீர் வாரீர் 

ஆனின்பால் ஆடுவீர் வாரீர் வாரீர்  
4435
ஐந்து மலங்களும் வெந்து விழஎழுத் 

தைந்துஞ் செயும்என்றீர் வாரீர் 

இந்து சிகாமணி வாரீர் வாரீர்