4441
ஒத்த இடந்தன்னில் நித்திரை செய்என்றீர் 

ஒத்த இடங்காட்ட வாரீர்() 

சித்த சிகாமணி வாரீர் 
4442
ஒட்டுமற் றில்லைநான் விட்டுப் பிரிகலேன் 

ஒட்டுவைத் தேனும்மேல் வாரீர் 

எட்டுக் குணத்தீரே வாரீர் வாரீர்  
4443
ஒருமை நிலையில் இருமையும் தந்த 

ஒருமையி னீர்இங்கு வாரீர் 

பெருமையி னீர்இங்கு வாரீர் வாரீர்  
4444
ஒண்மை விரும்பினேன் அண்மையில் ஈகுவீர் 

உண்மைசொன் னேன்இங்கு வாரீர் 

பெண்மை() இடங்கொண்டீர் வாரீர் வாரீர்  

 () வண்மை - முதற்பதிப்பு, பொ சு, பி இரா, 
4445
ஓங்கார நாடகம் பாங்காகச்() செய்கின்ற 

ஓங்கார நாடரே வாரீர் 

ஆங்கார நீக்கினீர் வாரீர் வாரீர்  

 () பாங்காரச் - பி இரா