4446
ஓங்கும்பிண் டாண்டங்கள் தாங்கும் பெருவெளி 

ஓங்கு நடேசரே வாரீர் 

பாங்குசெய் வீர்இங்கு வாரீர் வாரீர்  
4447
ஓசையின் உள்ளேஓர் ஆசை() உதிக்கமெல்() 

ஓசைசெய் வித்தீரே வாரீர் 

பாசம் அறுத்தீரே வாரீர் வாரீர்  

 () ஓசை - பிரதிபேதம் ஆ பா
 மேல் - முதற்பதிப்பு, பொ சு, பி இரா 
4448
ஓரா துலகினைப் பாரா திருநினக் 

கோரா வகைஎன்றீர் வாரீர் 

பேரா நிலைதந்தீர் வாரீர் வாரீர்  
4449
ஓடாது மாயையை நாடாது நன்னெறி 

ஊடா திருஎன்றீர் வாரீர் 

வாடா திருஎன்றீர் வாரீர் வாரீர்  
4450
ஓலக் கபாடத்தைச் சாலத் திறந்தருள் 

ஓலக்கங் காட்டினீர் வாரீர் 

காலக் கணக்கில்லீர் வாரீர் வாரீர்