4451
ஓடத்தின் நின்றொரு மாடத்தில் ஏற்றிமெய் 

யூடத்தைக் காட்டினீர் வாரீர் 

வேடத்தைப் பூட்டினீர் வாரீர் வாரீர்  
4452
ஓமத்தி லேநடுச் சாமத்தி லேஎனை 

ஓமத்தன்() ஆக்கினீர் வாரீர் 

சாமத்த() நீக்கினீர் வாரீர் வாரீர்  

 () ஓமத்தன் - உருவருவ வடிவம், பிரணவதேகம் ச மு க 
சாமத்தை - பொ சு, ச மு க் சாமத்தை - சாகுந்தன்மையை, ச மு க 
4453
ஓமென்ப தற்குமுன் ஆமென் றுரைத்துடன் 

ஊமென்று() காட்டினீர் வாரீர் 

நாமென்று நாட்டினீர் வாரீர் வாரீர் 

 () ஓம் - ஆம் - ஊம் - ஓம் ~hம் ஹும் பீஜாக்கரங்கள் 
4454
ஒளவிய மார்க்கத்தின் வௌ;வியல் நீக்கியே 

செவ்வியன் ஆக்கினீர் வாரீர் 

ஒவ்விஒன் றாக்கினீர் வாரீர் வாரீர்  
4455
கண்ணனை யீர்உம்மைக் காணஎன் ஆசை 

கடல்பொங்கு கின்றது வாரீர் 

உடல்தங்கு கின்றது வாரீர் வாரீர்