4456
கண்டணைந் தால்அன்றிக் காதல் அடங்காதென் 

கண்மணி யீர்இங்கு வாரீர் 

உண்மணி யீர்இங்கு வாரீர் வாரீர்   
4457
கட்டிக்கொண் டும்மைக் கலந்து கொளல்வேண்டும் 

காரண ரேஇங்கு வாரீர் 

பூரண ரேஇங்கு வாரீர்     
 
 வாரீர் சிதம்பர வல்லி சிவகாம 

வல்லி மணாளரே வாரீர் 

மணிமன்ற வாணரே வாரீர் 
 --------------------------------------------------------------------------------

 அம்பலவாணர் ஆடவருகை 
சிந்து 
 பல்லவி  
4458
ஆடவா ரீர் என்னோ டாடவா ரீர் 

அம்பலத்தில் ஆடுகின்றீர் ஆடவா ரீர்     
 கண்ணிகள்  
4459
தன்மைபிறர்க் கறிவரியீர் ஆடவா ரீர் 

தனித்தலைமைப் பெரும்பதியீர் ஆடவா ரீர் 
வன்மைமனத் தவர்க்கரியீர் ஆடவா ரீர் 

வஞ்சமிலா நெஞ்சகத்தீர் ஆடவா ரீர் 
தொன்மைமறை முடியமர்ந்தீர் ஆடவா ரீர் 

துரியபதங் கடந்தவரே ஆடவா ரீர் 
இன்மைதவிர்த் தெனைமணந்தீர் ஆடவா ரீர் 

என்னுடைய நாயகரே ஆடவா ரீர்  ஆடவா ரீர்    
4460
திருவாளர் போற்ற என்னோ டாடவா ரீர் 

திருவனையார் வாழ்த்தஇங்கே ஆடவா ரீர் 
பெருவாய்மைப் பெருந்தகையீர் ஆடவா ரீர் 

பேராசை பொங்குகின்றேன் ஆடவா ரீர் 
உருவாகி ஓங்குகின்றீர் ஆடவா ரீர் 

உத்தமரே இதுதருணம் ஆடவா ரீர் 
இருவாணர் ஏத்தநின்றீர் ஆடவா ரீர் 

என்னுடைய நாயகரே ஆடவா ரீர் ஆடவா ரீர்