4486
மெல்லியல் சிவகாம வல்லி யுடன்களித்து 
விளையா டவும்எங்கள் வினைஓ டவும்ஒளித்து 
எல்லையில் இன்பந்தரவும் நல்லசம யந்தானிது 
இங்குமங்கும் நடமாடி இருக்கலாம் என்றபோது வருவார்  
 வருவார ழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே 
வந்தாற் பெறலாம்நல்ல வரமே --------------------------------------------------------------------------------

 என்ன புண்ணியம் செய்தேனோ 
சிந்து 
 பல்லவி 
4487
என்ன புண்ணியம் செய்தே னோ - அம் மாநான் 

என்ன புண்ணியம் செய்தே னோ  
 பல்லவி எடுப்பு 
4488
மன்னர்நாதர் அம்பலவர் வந்தார்வந்தார் என்றுதிருச் 

சின்னநாதம் என்னிரண்டு செவிகளினுள் சொல்கின்றதே என்ன  
 கண்ணிகள் 

4489
பொருள்நான் முகனுமாலும் தெருள்நான்ம றையுநாளும் 

போற்றும்சிற் றம்பலத்தே ஏற்றும ணிவிளக்காய் 
அருள்நாட கம்புரியும் கருணாநி தியர்உன்னை 

ஆளவந்தார் வந்தார்என்றெக் காளநாதம் சொல்கின்றதே என்ன  
4490
பாடியநல் லோர்தமக்கே நாடியதெல் லாம்அளிப்பார் 

பத்திவலை யுட்படுவார் சத்தியர்நித் தியர்மன்றில் 
ஆடியபொற் பாதர்வேதம் தேடியசிற் போதர்உன்னை 

அணையவந்தார்வந்தார்என்றேஇணையில்நாதம்சொல்கின்றதே என்ன