4496
இவர்க்கும் எனக்கும்பெரு வழக்கிருக் கின்றதது 

என்றும் தீரா வழக்குக் காண டி   
 பல்லவி எடுப்பு 
4497
எவர்க்கும் பெரியவர்பொன் னம்பலத் தேநடம் 

இட்டார் எனக்குமாலை இட்டார் இதோவந்தார் இவர்க்கும்  
 கண்ணிகள் 
4498
அன்றிதோ வருகின்றேன் என்று போனவர்அங்கே 

யார்செய்த தடையாலோ இருந்தார்என் கையிற்சங்கை 
இன்றுதம் கையிற்கொண்டே வந்துநிற் கின்றார்இங்கே 

இந்தக் கதவைமூடு இவர்போவ தினிஎங்கே இவர்க்கும்  
4499
அவரவர் உலகத்தே அறிந்தலர் தூற்றப்பட்டேன் 

அன்றுபோ னவர்இன்று வந்துநிற் கின்றார்கெட்டேன் 
இவர்சூதை அறியாதே முன்னம் ஏமாந்துவிட்டேன் 

இந்தக் கதவைமூடு இனிஎங்கும் போகஒட்டேன் இவர்க்கும்  
4500
சின்ன வயதில்என்னைச் சேர்ந்தார்புன் னகையோடு 

சென்றார் தயவால்இன்று வந்தார் இவர்க்கார்ஈடு 
என்னைவிட் டினிஇவர் எப்படிப் போவார்ஓடு 

இந்தக் கதவைமூடு இரட்டைத்தாட் கோலைப்போடு   
 இவர்க்கும் எனக்கும்பெரு வழக்கிருக் கின்றதது 

என்றும் தீரா வழக்குக் காண டி 
 --------------------------------------------------------------------------------

 இது நல்ல தருணம் 
சிந்து 
 பல்லவி