4506
கரையா எனதுமனக் கல்லும் கரைந்தது 

கலந்து கொளற்கென் கருத்தும் விரைந்தது 
புரையா நிலையில்என் புந்தியும் தங்கிற்று 

பொய்படாக் காதல் ததும்பிமேல் பொங்கிற்று    
 இதுநல்ல தருணம் - அருள்செய்ய 

இதுநல்ல தருணம் --------------------------------------------------------------------------------

 ஆனந்தப் பரிவு
தாழிசை 
4507
நானந்த மடையாதெந் நாளினும்உள் ளவனாகி நடிக்கும் வண்ணம் 
ஆனந்த நடம்புரிவான் ஆனந்த அமுதளித்தான் அந்தோ அந்தோ   
4508
சாதிமதம் சமயமுதற் சங்கற்ப விகற்பம்எலாம் தவிர்ந்து போக 
ஆதிநடம் புரிகின்றான் அருட்சோதி எனக்களித்தான் அந்தோ அந்தோ    
4509
துரியபதம் அடைந்தபெருஞ் சுத்தர்களும் முத்தர்களும் துணிந்து சொல்லற் 
கரியபதம் எனக்களித்தான் அம்பலத்தில் ஆடுகின்றான் அந்தோ அந்தோ   
4510
மருட்பெருஞ்சோ தனைஎனது மட்டுமிலா வணங்கருணை வைத்தே மன்றில் 
அருட்பெருஞ்சோ திப்பெருமான் அருளமுதம் எனக்களித்தான் அந்தோ அந்தோ