4516
மருள்வடிவே எஞ்ஞான்றும் எவ்விடத்தும் எதனாலு மாய்வி லாத 
அருள்வடிவாய் இம்மையிலே அடைந்திடப்பெற் றாடுகின்றேன்அந்தோஅந்தோ  
4517
எக்கரையும் காணாதே இருட்கடலில் கிடந்தேனை எடுத்தாட் கொண்டு 
அக்கரைசேர்த்தருளெனுமோர்சர்க்கரையும்எனக்களித்தான்அந்தோஅந்தோ()  

 () இப்பதினோராம் செய்யுள் ஒரு தனிப்பாடல் பொருள் ஒற்றுமை கருதி 

இப்பதிகத்தில் சேர்க்கப்பெற்றது --------------------------------------------------------------------------------

 ஞான மருந்து
சிந்து 
 பல்லவி 
4518
ஞான மருந்திம் மருந்து - சுகம் 
நல்கிய சிற்சபா நாத மருந்து   
 கண்ணிகள் 
4519
அருட்பெருஞ் சோதி மருந்து - என்னை 

ஐந்தொழில் செய்தற் களித்த மருந்து 
பொருட்பெரும் போக மருந்து - என்னைப் 

புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து ஞான  
4520
எல்லாம்செய் வல்ல மருந்து - என்னுள் 

என்றும் விடாமல் இனிக்கு மருந்து 
சொல்லால் அளவா மருந்து - சுயஞ் 

ஸோதி அருட்பெருஞ் ஸோதி மருந்து ஞான