4521
காணாது காட்டு மருந்து - என்றன் 

கையிற்பொற் கங்கணம் கட்டு மருந்து 
ஆணாகிப் பெண்ணாம் மருந்து - அது 

வாகி மணிமன்றில் ஆடு மருந்து ஞான  
4522
சுத்தசன் மார்க்க மருந்து - அருட் 

சோதி மலையில் துலங்கு மருந்து 
சித்துரு வான மருந்து - என்னைச் 

சித்தெலாம் செய்யச்செய் வித்த மருந்து ஞான  
4523
அன்பர்க் கெளிய மருந்து - மற்றை 

ஐவர்க்கும் காண்டற் கரிய மருந்து 
என்பற்றில் ஓங்கு மருந்து - என்னை 

இன்ப நிலையில் இருத்து மருந்து ஞான  
4524
நாதாந்த நாட்டு மருந்து - பர 

ஞான வெளியில் நடிக்கு மருந்து 
போதாந்தர்க் கெய்து மருந்து - என்னுள் 

பொன்னடி காட்டிப் புணர்ந்த மருந்து ஞான  
4525
ஆதி அனாதி மருந்து - திரு 

அம்பலத் தேநட மாடு மருந்து 
ஸோதி மயமா மருந்து - என்னைச் 

சோதியா தாண்ட துரிய மருந்து ஞான