4526
ஆறந்தத் தோங்கு மருந்து - அதற் 

கப்பாலுக் கப்பாலும் ஆன மருந்து 
ஊறந்த மில்லா மருந்து - எனக் 

குள்ளே கலந்த உறவா மருந்து ஞான  
4527
என்னுயிர்க் கன்பா மருந்து - கலந் 

தென்னுயிர்க் குள்ளே இருந்த மருந்து 
என்னுயிர் காக்கு மருந்து - என்றும் 

என்னுயி ராகிய இன்ப மருந்து ஞான  
4528
என்னறி வுட்கொள் மருந்து - என்றும் 

என்னறி வாகி இலங்கு மருந்து 
என்னறி வின்ப மருந்து - என்னுள் 

என்னறி வுக்கறி வென்னு மருந்து ஞான  
4529
என்குரு வான மருந்து - என்றும் 

என்தெய்வ மாகி இருக்கு மருந்து 
என்அன்னை யென்னு மருந்து - என்றும் 

என்தந்தை யாகிய இன்ப மருந்து ஞான  
4530
என்பெரு வாழ்வா மருந்து - என்றும் 

என்செல்வ மாகி இருக்கு மருந்து 
என்னுயிர் நட்பா மருந்து - எனக் 

கெட்டெட்டுச் சித்தியும் ஈந்த மருந்து ஞான