4536
மேலை வெளியா மருந்து - நான் 

வேண்டுந்தோ றெல்லாம் விளையு மருந்து 
சாலை விளக்கு மருந்து - சுத்த 

சமரச சன்மார்க்க சங்க மருந்து ஞான  
4537
என்னைத்தா னாக்கு மருந்து - இங்கே 

இறந்தாரை எல்லாம் எழுப்பு மருந்து 
துன்னுமெய்ச் சோதி மருந்து - அருட் 

சோதியால் என்னைத் துலக்கு மருந்து ஞான  
4538
பொய்யர்க் கரிதா மருந்து - என்னைப் 

புறத்தும் அகத்தும் புணர்ந்த மருந்து 
கையிற் கிடைத்த மருந்து - சிவ 

காமக் கொடியைக் கலந்த மருந்து ஞான  
4539
ஆணவம் தீர்க்கு மருந்து - பர 

மானந்தத் தாண்டவ மாடும் மருந்து 
மாணவ வண்ண மருந்து - என்னை 

வலிய அழைத்து வளர்க்கு மருந்து ஞான  
4540
வானடு வான மருந்து - என்னை 

மாமணி மேடைமேல் வைத்த மருந்து 
ஊனம் தவிர்த்த மருந்து - கலந் 

துள்ளே இனிக்கின்ற உண்மை மருந்து ஞான