4551
மலமைந்து நீக்கு மருந்து - புவி 

வானண்ட மெல்லாம் வளர்க்கு மருந்து 
நலமிக் கருளு மருந்து - தானே 

நானாகித் தானாளு நாட்டு மருந்து   
 ஞான மருந்திம் மருந்து - சுகம் 

நல்கிய சிற்சபா நாத மருந்து 
 --------------------------------------------------------------------------------

 சிவசிவ ஸோதி 
சிந்து 
 பல்லவி 
4552
சிவசிவ சிவசிவ ஸோதி - சிவ 
சிவசிவ சிவசிவ சிவசிவ ஸோதி 
சிவசிவ சிவசிவ ஸோதி   
 கண்ணிகள் 
4553
சிற்பர மாம்பரஞ் ஸோதி - அருட் 

சித்தெல்லாம் வல்ல சிதம்பர ஸோதி 
தற்பர தத்துவ ஸோதி - என்னைத் 

தானாக்கிக் கொண்ட தயாநிதி ஸோதி சிவசிவ  
4554
சித்துரு வாம்சுயஞ் ஸோதி - எல்லாம் 

செய்திட வல்ல சிதம்பர ஸோதி 
அத்துவி தானந்த ஸோதி - என்னை 

ஆட்கொண் டருளும்சிற் றம்பல ஸோதி சிவசிவ  
4555
சின்மய மாம்பெருஞ் ஸோதி - அருட் 

செல்வ மளிக்கும் சிதம்பர ஸோதி 
தன்மய மாய்நிறை ஸோதி - என்னைத் 

தந்தமெய் ஸோதி சதானந்த ஸோதி சிவசிவ