4566
ஆறந்தத் தேநிறை ஸோதி - அவைக் 

கப்புறத் தப்பாலும் ஆகிய ஸோதி 
வீறும் பெருவெளி ஸோதி - மேலும் 

வெட்ட வெளியில் விளங்கிய ஸோதி சிவசிவ  
4567
பேரருட் ஸோதியுள் ஸோதி - அண்ட 

பிண்டங்கள் எல்லாம் பிறங்கிய ஸோதி 
வாரமுற் றோங்கிய ஸோதி - மன 

வாக்குக் கெட்டாததோர் மாமணி() ஸோதி சிவசிவ  

 () மாணிக்க - ச மு க பதிப்பு 
4568
ஒன்றான பூரண ஸோதி - அன்பில் 

ஒன்றாத உள்ளத்தில் ஒன்றாத ஸோதி 
என்றா ஒளிர்கின்ற ஸோதி - என்னுள் 

என்றும் விளங்கிய என்னுயிர் ஸோதி சிவசிவ  
4569
மெய்யேமெய் யாகிய ஸோதி - சுத்த 

வேதாந்த வீட்டில் விளங்கிய ஸோதி 
துய்ய சிவானந்த ஸோதி - குரு 

துரியத் தலத்தே துலங்கிய ஸோதி சிவசிவ  
4570
சிவமய மாம்சுத்த ஸோதி - சுத்த 

சித்தாந்த வீட்டில் சிறந்தொளிர் ஸோதி 
உவமையில் லாப்பெருஞ் ஸோதி - என 

துள்ளே நிரம்பி ஒளிர்கின்ற ஸோதி சிவசிவ