4571
என்னைத்தா னாக்கிய ஸோதி - இங்கே 

இறந்தாரை எல்லாம் எழுப்புமோர் ஸோதி 
அன்னைக்கு மிக்கருட் ஸோதி - என்னை 

ஆண்டமு தம்தந்த ஆனந்த ஸோதி சிவசிவ  
4572
சித்தம் சிவமாக்கும் ஸோதி - நான் 

செய்த தவத்தால் தெரிந்தஉட் ஸோதி 
புத்தமு தாகிய ஸோதி - சுக 

பூரண மாய்ஒளிர் காரண ஸோதி சிவசிவ  
4573
தம்பத்தில் ஏற்றிய ஸோதி - அப்பால் 

சார்மணி மேடைமேல் தான்வைத்த ஸோதி 
விம்பப் பெருவெளி ஸோதி - அங்கே 

வீதியும் வீடும் விளக்கிய ஸோதி சிவசிவ  
4574
சுகமய மாகிய ஸோதி - எல்லா 

ஸோதியு மான சொரூபஉட் ஸோதி 
அகமிதந் தீர்த்தருள் ஸோதி - சச்சி 

தானந்த ஸோதி சதானந்த ஸோதி சிவசிவ  
4575
நித்த பரானந்த ஸோதி - சுத்த 

நிரதிச யானந்த நித்திய ஸோதி 
அத்துவி தானந்த ஸோதி - எல்லா 

ஆனந்த வண்ணமும் ஆகிய ஸோதி சிவசிவ