4576
பொய்யாத புண்ணிய ஸோதி - எல்லாப் 

பொருளும் விளங்கப் புணர்த்திய ஸோதி 
நையா தருள்செய்த ஸோதி - ஒரு 

நானும்தா னும்ஒன்றாய் நண்ணிய ஸோதி சிவசிவ  
4577
கண்ணிற் கலந்தருள் ஸோதி - உளக் 

கண்ணுயிர்க் கண்ணருட் கண்ணுமாம் ஸோதி 
எண்ணிற்ப டாப்பெருஞ் சோதி - நான் 

எண்ணிய வண்ணம் இயற்றிய ஸோதி சிவசிவ  
4578
விந்து ஒளிநடு ஸோதி - பர 

விந்து ஒளிக்குள் விளங்கிய ஸோதி 
நம்துயர் தீர்த்தருள் ஸோதி - பர 

நாதாந்த நாட்டுக்கு நாயக ஸோதி சிவசிவ  
4579
தான்அன்றி ஒன்றிலா ஸோதி - என்னைத் 

தன்மயம் ஆக்கிய சத்திய ஸோதி 
நான்இன்று கண்டதோர் ஸோதி - தானே 

நானாகி வாழ்ந்திட நல்கிய ஸோதி சிவசிவ  
4580
தன்னிகர் இல்லதோர் ஸோதி - சுத்த 

சன்மார்க்க சங்கம் தழுவிய ஸோதி 
என்னுள் நிறைந்தமெய் ஸோதி - என்னை 

ஈன்றைந் தொழில்செய்என் றேவிய ஸோதி சிவசிவ