4581
அச்சம் தவிர்த்தமெய் ஸோதி - என்னை 

ஆட்கொண் டருளிய அம்பல ஸோதி 
இச்சை எலாம்தந்த ஸோதி - உயிர்க் 

கிங்குமங் கென்னாமல் எங்குமாம் ஸோதி சிவசிவ  
4582
காலையில் நான்கண்ட ஸோதி - எல்லாக் 

காட்சியும் நான்காணக் காட்டிய ஸோதி 
ஞாலமும் வானுமாம் ஸோதி - என்னுள் 

நானாகித் தானாகி நண்ணிய ஸோதி சிவசிவ  
4583
ஏகாந்த மாகிய ஸோதி - என்னுள் 

என்றும் பிரியா திருக்கின்ற ஸோதி 
சாகாத வரந்தந்த ஸோதி - என்னைத் 

தானாக்கிக் கொண்டதோர் சத்திய ஸோதி சிவசிவ  
4584
சுத்த சிவமய ஸோதி - என்னை 

ஸோதி மணிமுடி சூட்டிய ஸோதி 
சத்திய மாம்பெருஞ் ஸோதி - நானே 

தானாகி ஆளத் தயவுசெய் ஸோதி   
 சிவசிவ சிவசிவ ஸோதி - சிவ 
சிவசிவ சிவசிவ சிவசிவ ஸோதி 
சிவசிவ சிவசிவ ஸோதி --------------------------------------------------------------------------------

 ஸோதியுள் ஸோதி 
சிந்து 
 பல்லவி 
4585
ஸோதியுள் ஸோதியுள் ஸோதி - சுத்த 
ஸோதி சிவஸோதி ஸோதியுள் ஸோதி 
ஸோதியுள் ஸோதியுள் ஸோதி  
 கண்ணிகள்