4586
சிவமே பொருளென்று தேற்றி - என்னைச் 

சிவவெளிக் கேறும் சிகரத்தில் ஏற்றிச் 
சிவமாக்கிக் கொண்டது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி  
4587
வித்தெல்லாம் ஒன்றென்று நாட்டி - அதில் 

விளைவு பலபல வேறென்று காட்டிச் 
சித்தெல்லாம் தந்தது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி  
4588
சொல்வந்த அந்தங்கள் ஆறும் - ஒரு 

சொல்லாலே ஆமென்றச் சொல்லாலே வீறும் 
செல்வம் கொடுத்தது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி  
4589
தங்கோல் அளவெனக் கோதிச் - சுத்த 

சமரச சத்திய சன்மார்க்க நீதிச் 
செங்கோல் அளித்தது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி  
4590
ஆபத்தை நீக்கி வளர்த்தே - சற்றும் 

அசையாமல் அவியாமல் அடியேன் உளத்தே 
தீபத்தை வைத்தது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி