4601
பத்தி நெறியில் செழித்தே - அன்பில் 

பாடுமெய் யன்பர் பதியில் பழுத்தே 
தித்தித் திருப்பது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஸோதி  ஸோதி   
4602
பித்தாடு மாயைக்கு மேலே - சுத்தப் 

பிரம வெளியினில் பேரரு ளாலே 
சித்தாடு கின்றது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஸோதி  ஸோதி   
4603
தருநெறி எல்லாம்உள் வாங்கும் - சுத்த 

சன்மார்க்கம் என்றோர் தனிப்பேர்கொண் டோ ங்கும் 
திருநெறிக் கேசென்று பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஸோதி  ஸோதி   
4604
எம்பொருள் எம்பொருள் என்றே - சொல்லும் 

எல்லாச் சமயத்துள் எல்லார்க்கும் ஒன்றே 
செம்பொருள் என்பது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஸோதி  ஸோதி   
4605
சைவ முதலாக நாட்டும் - பல 

சமயங்கள் எல்லாம் தனித்தனிக் காட்டும் 
தெய்வம் இதுவந்து பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஸோதி  ஸோதி