4606
எள்ளலில் வான்முதல் மண்ணும் - அமு 

தெல்லாம் இதிலோர் இறையள வென்னும் 
தௌ;ளமு தாம்இது பாரீர் -திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி  
4607
எத்தாலும் ஆகாதே அம்மா - என்றே 

எல்லா உலகும் இயம்புதல் சும்மா 
செத்தாரை மீட்பது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி  
4608
பிறந்து பிறந்துழன் றேனை - என்றும் 

பிறவா திறவாப் பெருமைதந் தூனைச் 
சிறந்தொளிர் வித்தது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி  
4609
வருவித்த வண்ணமும் நானே - இந்த 

மாநிலத் தேசெயும் வண்ணமும் தானே 
தெரிவித் தருளிற்றுப் பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி  
4610
பாரிடம் வானிட மற்றும் - இடம் 

பற்றிய முத்தர்கள் சித்தர்கள் முற்றும் 
சேரிட மாம்இது பாரீர் - திருச் 

சிற்றம் பலத்தே திருநட ஸோதி ஸோதி