4616
அருட்சபை நடம்புரி அருட்பெருஞ் சோதி
தெருட்பெருஞ் சீர்சொலத் திகழ்வ சித்தியே()   
 
() இது பொசு அவர்கள் ஆம் ஆண்டு பதிப்பித்த ஆறு திருமுறையும் சேர்ந்த 
முதற் பதிப்பில் ஆறாந் திருமுறை இறுதியில் ஓபல்வகைய தனிப்பாடல்கள்ஒள என்ற தலைப்பின்கீழ் 
முதன்முதலாக அச்சிடப்பெற்றது பிஇரா பதிப்பில் () இஃது அகவலுக்கு முன்னர் காப்புப் 
போன்று வைக்கப்பெற்றுள்ளது ஆபா இதனை ஆறாம் திருமுறை முன் பகுதி 
(பூர்வ ஞான சிதம்பரப் பகுதி)யின் இறுதியில் தனித்திரு அலங்கலில் சேர்த்திருக்கிறார்    

திருச்சிற்றம்பலம்
டீயஉம--------------------------------------------------------------------------------


 அருட்பெருஞ்சோதி அட்டகம் 

எழுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
4617
அருட்பெரு வெளியில் அருட்பெரு உலகத் 

தருட்பெருந் தலத்துமேல் நிலையில் 
அருட்பெரும் பீடத் தருட்பெரு வடிவில் 

அருட்பெருந் திருவிலே அமர்ந்த 
அருட்பெரும் பதியே அருட்பெரு நிதியே 

அருட்பெருஞ் சித்திஎன் அமுதே 
அருட்பெருங் களிப்பே அருட்பெருஞ் சுகமே 

அருட்பெருஞ் சோதிஎன் அரசே    
4618
குலவுபே ரண்டப் பகுதிஓர் அனந்த 

கோடிகோ டிகளும்ஆங் காங்கே 
நிலவிய பிண்டப் பகுதிகள் முழுதும் 

நிகழ்ந்தபற் பலபொருள் திரளும் 
விலகுறா தகத்தும் புறத்துமேல் இடத்தும் 

மெய்அறி வானந்தம் விளங்க 
அலகுறா தொழியா ததுஅதில் விளங்கும் 

அருட்பெருஞ் சோதிஎன் அரசே   
4619
கண்முதல் பொறியால் மனமுதல் கரணக் 

கருவினால் பகுதியின் கருவால் 
எண்முதல் புருட தரத்தினால் பரத்தால் 

இசைக்கும்ஓர் பரம்பர உணர்வால் 
விண்முதல் பரையால் பராபர அறிவால் 

விளங்குவ தரிதென உணர்ந்தோர் 
அண்முதல் தடித்துப் படித்திட ஓங்கும் 

அருட்பெருஞ் சோதிஎன் அரசே   
4620
நசைத்தமேல் நிலைஈ தெனஉணர்ந் தாங்கே 

நண்ணியும் கண்ணுறா தந்தோ 
திசைத்தமா மறைகள் உயங்கின மயங்கித் 

திரும்பின எனில்அதன் இயலை 
இசைத்தல்எங் ஙனமோ ஐயகோ சிறிதும் 

இசைத்திடு வேம்என நாவை 
அசைத்திடற் கரிதென் றுணர்ந்துளோர் வழுத்தும் 

அருட்பெருஞ் சோதிஎன் அரசே