4631
ஓவா துண்டு படுத்துறங்கி உணர்ந்து விழித்துக் கதைபேசி 

உடம்பு நோவா துளமடக்கா தோகோ நோன்பு கும்பிட்டே 
சாவா வரமும் சித்திஎலாம் தழைத்த நிலையும் சன்மார்க்க 

சங்க மதிப்பும் பெற்றேன்என் சதுர்தான் பெரிதென் சரித்திரத்தை 
ஆவா நினைக்கில் அதிசயம்என் அப்பா அரசே அமுதேஎன் 

ஆவிக் கினிய துணையேஎன் அன்பே அறிவே அருட்சோதித் 
தேவா இதுநின் செயலேஇச் செயலை நினைக்குந் தொறும்எனது 

சிந்தை கனிந்து கனிந்துருகித் தௌ;ளா ரமுதம் ஆனதுவே   
4632
இரவும் பகலும் தூங்கியஎன் தூக்கம் அனைத்தும் இயல்யோகத் 

திசைந்த பலனாய் விளைந்ததுநான் இரண்டு பொழுதும் உண்டஎலாம் 
பரவும் அமுத உணவாயிற் றந்தோ பலர்பால் பகல்இரவும் 

படித்த சமயச் சாத்திரமும் பலரால் செய்த தோத்திரமும் 
விரவிக் களித்து நாத்தடிக்க விளம்பி விரித்த பாட்டெல்லாம் 

வேதா கமத்தின் முடிமீது விளங்கும் திருப்பாட் டாயினவே 
கரவொன் றறியாப் பெருங்கருணைக் கடவுள் இதுநின் தயவிதனைக் 

கருதும் தொறும்என் கருத்தலர்ந்து சுகமே மயமாக் கண்டதுவே   
4633
ஊற்றை உடம்பில் இருட்டறைவாய் உறங்கி விழித்துக் கதைபேசி 

உண்டிங் குடுத்துக் கருத்திழந்தே உதவா எருதின் ஊர்திரிந்து 
நேற்றை வரையும் வீண்போது போக்கி இருந்தேன் நெறிஅறியேன் 

நேரேஇற்றைப் பகல்அந்தோ நெடுங்கா லமும்மெய்த் தவயோக 
ஆற்றை அடைந்தோர் எல்லோரும் அச்சோ என்றே அதிசயிப்ப 

அமுதுண் டழியாத் திருஉருவம் அடைந்தேன் பெரிய அருட்சோதிப் 
பேற்றை உரிமைப் பேறாகப் பெற்றேன் பெரிய பெருமான்நின் 

பெருமை இதுவேல் இதன்இயலை யாரே துணிந்து பேசுவரே   
4634
புரைசேர் வினையும் கொடுமாயைப் புணர்ப்பும் இருளும் மறைப்பினொடு 

புகலும் பிறவாம் தடைகளெலாம் போக்கி ஞானப் பொருள்விளங்கும் 
வரைசேர்த் தருளிச் சித்தியெலாம் வழங்கிச் சாகா வரங்கொடுத்து 

வலிந்தென் உளத்தில் அமர்ந்துயிரில் கலந்து மகிழ்ந்து வாழ்கின்றாய் 
பரைசேர் வெளியில் பதியாய்அப் பால்மேல் வெளியில் விளங்குசித்த 

பதியே சிறியேன் பாடலுக்குப் பரிசு விரைந்தே பாலித்த 
அரைசே அமுதம் எனக்களித்த அம்மே உண்மை அறிவளித்த 

அப்பா பெரிய அருட்சோதி அப்பா வாழி நின்அருளே   
திருச்சிற்றம்பலம் 

டீயஉம--------------------------------------------------------------------------------


 பெறாப் பேறு

எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் 
4635
ஆவாஎன் றெனையாட்கொண் டருளியதௌ; ளமுதே 

அம்மேஎன் அப்பாஎன் ஐயாஎன் அரசே 
சாவாத வரம்எனக்குத் தந்தபெருந் தகையே 

தயாநிதியே சிற்சபையில் தனித்தபெரும் பதியே 
ஓவாதென் உள்ளகத்தே ஊற்றெழும்பேர் அன்பே 

உள்ளபடி என்னறிவில் உள்ளபெருஞ் சுகமே 
நீவாஎன் மொழிகளெலாம் நிலைத்தபயன் பெறவே 

நித்திரைதீர்ந் தேன்இரவு நீங்கிவிடிந் ததுவே